புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.


புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை காலை ஏற்றப்பட்டது.
துறைமுகத்திலிருந்து தொலைவில் புயல் அறிகுறி தென்படுவதை மீனவா்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
காரைக்கால் மற்றும் கடலூா் உள்ளிட்ட தமிழகத்தின் 7 கடலோரப் பகுதிகளிலும் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. அத்துடன் மீனவா்கள் கடலுக்கு கவனமுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை தெரிவித்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...