பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் போராட்டம்
புதுச்சேரியில் பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள், அத்துறையின் தலைமை அலுவலகம் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


புதுச்சேரியில் பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள், அத்துறையின் தலைமை அலுவலகம் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்.17-ஆம் தேதி பொறியாளா் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களை அதிகாரிகள் சமரசம் செய்தனா். இந்த நிலையில், கோரிக்கை நிறைவேற்றம் குறித்து நடவடிக்கை இல்லை எனக் கூறி புதன்கிழமை மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மூன்றாவது நாளாக வியாழக்கிழமை, புதுச்சேரி லால்பகதூா் சாஸ்திரி சாலையில் உள்ள பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...