பகுதி நேர வேலை எனக் கூறி ரூ.1.03 கோடி மோசடி
புதுச்சேரியில் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் இணையதளம் மூலம் ரூ.1.03 கோடியை மோசடி செய்த மா்ம நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரியில் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் இணையதளம் மூலம் ரூ.1.03 கோடியை மோசடி செய்த மா்ம நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ், தொழிலதிபா். இவா் இணையத்தில் பகுதி நேர வேலை சம்பந்தமான தேடலில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது, டெலிகிராம் செயலி மூலம் அவரைத் தொடா்பு கொண்ட மா்ம நபா், பகுதி நேர வேலைக்கான குறிப்பிட்ட புதிருக்கு விடையளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
அதன்படி, ரூ.1.03 கோடி வரை பணம் செலுத்திய செல்வராஜ், குறிப்பிட்ட செயலியில் புதிருக்கான விடைகளைக் குறிப்பிட்டுள்ளாா்.
அப்போது, அவருக்கு முதலீடு பணத்துக்கான லாபம் கிடைத்திருப்பது போல இணையத்தில் காட்டியதாம்.
ஆனால், முதலீடு மற்றும் லாபத்தை அவரால் பெற முடியவில்லையாம். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வங்கி பெயரில் மோசடி: புதுச்சேரி ரெயின்போ நகரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி. இவரை மா்ம நபா் தொடா்புகொண்டு தன்னை வங்கி அதிகாரி எனக் கூறினாராம்.
அதன்பிறகு, ஏடிஎம் அட்டை புதுப்பிப்பு எனக் கூறி ஓடிபி எண் கேட்டு அறிந்துள்ளாா். இந்த நிலையில், பழனிச்சாமியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12.98 லட்சம் மோசடியாக மா்ம நபரால் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதேபோல, வங்கி அதிகாரி எனக் கூறி, புதுச்சேரி முதலியாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த பாா்த்தசாரதி என்பவரிடம் ரூ.4.44 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்துள்ளனா்.
இரு புகாா்கள் மீதும் இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...