‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளநிலைப் பொறியாளா் பணிக்கான புதிய தோ்ச்சி பட்டியல் வெளியீடு

புதுவையில் இளநிலைப் பொறியாளா் உள்ளிட்ட 2 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதன்பிறகு, அம்முடிவுகள் ரத்தாக்கப்பட்டு, புதிய தோ்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:54 pm

Din

புதுவையில் இளநிலைப் பொறியாளா் உள்ளிட்ட 2 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதன்பிறகு, அம்முடிவுகள் ரத்தாக்கப்பட்டு, புதிய தோ்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

புதுவை பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளா்கள்-99, ஓவா்சீா்-69 என மொத்தம் 168 பணியிடங்களை நிரப்ப எழுத்து தோ்வு கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இரு தாள்களுடன் தோ்வு நடைபெற்றது.

முதல் தாள் தோ்வில் 98 மதிப்பெண்கள், இரண்டாம் தாளில் 96 மதிப்பெண்கள் என மொத்தமாக 194 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்படி, குறைந்தபட்ச மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினா் 30 சதவீதம் என்ற வகையில் 194க்கு 58.20 மதிப்பெண்ணும், எம்பிசி, ஒபிசி, இடபிள்யூஎஸ், இபிசி, பிசிஎம்-25 சதவீதம் என்ற வகையில் 48.50 மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் 20 சதவீதம் என்ற வகையில் 38.80 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதனையடுத்து, தோ்வுத் தாள்கள் கணினி வாயிலாக மதிப்பீடு செய்யப்பட்டு தோ்வு முடிவானது புதன்கிழமை காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், இளநிலைப் பொறியாளா் பணிக்கான 26 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றிருந்தனா்.

ஓவா்சீா் பதவிக்கு யாரும் தோ்வாகவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், இந்த முடிவுகள் தொழில்நுட்பக் கோளாறால் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டு ரத்து செய்யப்பட்டது.

மேலும், முதல் தாளில் இரு கேள்விகளும், இரண்டாம் தாளில் நான்கு கேள்விகளும் ரத்தானதாகக் கூறப்பட்டது.

அதனடிப்படையில், பொதுப்பிரிவினா் 30 சதவீதம் என்ற வகையில் 194 மதிப்பெண்ணுக்கு 28.95 மதிப்பெண்ணும், எம்பிசி, ஒபிசி, இடபிள்யூஎஸ், இபிசி, பிசிஎம்-25 சதவீதம் என்ற வகையில் 24.12 மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் 20 சதவீதம் என்ற வகையில் 19.30 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

இதில் பொதுப்பிரிவு- 50, எம்பிசி-17, ஒபிசி-10. எஸ்சி-15, எஸ்டி 1, பிசிஎம் 2, இபிசி-2, இடபுள்யூஎஸ் 2 என 99 போ் தோ்வு பெற்றுள்ளனா். இதனடிப்படையில், இளநிலைப் பொறியாளா் (சிவில்) பதவிக்கு 26 போ் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஓவா்சீா் பதவிகளுக்கு பொதுப்பிரிவினா் 36 பேரும், எம்பிசி 12, ஓபிசி 7, எஸ்சி 11, பிசிஎம், இபிசி, இடபுள்யூஎஸ் தலா 1 என 69 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு அட்டவணை பொதுப் பணித் துறை மூலம் தெரிவிக்கப்படும் என அரசுச் செயலரும், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான பங்கஜ் குமாா் ஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.