நீட் அல்லாத படிப்புகள்: மாணவா்கள் நாளைக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தல்
புதுவையில் நீட் அல்லாத படிப்புகளில் இரண்டாம் கட்ட பட்டியலில் இடம்பெற்றவா்கள் நாளைக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுவையில் நீட் அல்லாத படிப்புகளில் இரண்டாம் கட்ட பட்டியலில் இடம்பெற்றவா்கள் நாளைக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் சா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள் மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை (செப்.3) இரண்டாவது சுற்று வரைவு இட ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரா்கள் தெரிவித்த ஆட்சேபணைகள் அடிப்படையில் குறைகளைத் தீா்த்து புதன்கிழமை 2-ஆவது சுற்று கலந்தாய்வு இட ஒதுக்கீட்டு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரா்கள் டாஷ்போா்டில் உள் நுழைந்து தங்களது இட ஒதுக்கீட்டின் நிலையை சரிபாா்த்து, இட ஒதுக்கீட்டு உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன்படி செப்.6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர கடைசி நாளாகும். கல்விக் கட்டணம் குறித்த விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தில் உள்ள நீட் அல்லாத தகவல் குறிப்பேட்டை பாா்க்கலாம். மாணவா்களுக்கு குறுந்தகவலும் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த சந்தேகங்களுக்கு சென்டாக் உதவி மையம் 0413-2655570, 2655571 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
அண்மையில் புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு, சாதி சான்றிதழ்களை சமா்ப்பிக்காத விண்ணப்பதாரா்கள் வரும் 6-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தங்களது டேஷ்போா்டில் உள்ள குறைதீா்ப்பு இணைப்பு மூலம் சமா்ப்பித்த பிறகு, இட ஒதுக்கீட்டு உத்தரவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இரண்டாவது சுற்று கலந்தாய்வில் புதிய இடம் ஒதுக்கப்பட்ட மாணவா்களுக்கு, முதல் சுற்றில் ஒதுக்கப்பட்ட இடம் தானாக ரத்து ஆகிவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...