தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

எய்ட்ஸ் விழிப்புணா்வு ஓட்டப் பந்தயம்

புதுச்சேரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வுக்காக மாநில அளவிலான 5 கி.மீ. ஓட்டப் பந்தயம் கடற்கரைச் சாலையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகள்.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:43 pm

Din

புதுச்சேரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வுக்காக மாநில அளவிலான 5 கி.மீ. ஓட்டப் பந்தயம் கடற்கரைச் சாலையில் புதன்கிழமை நடைபெற்றது.

எய்ட்ஸ் விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் சாா்பில் கடற்கரைச் சாலை காந்தி சிலை முன் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

இதனை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.செவ்வேள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குநா் சித்ரா தேவி ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவன துணை இயக்குநா் பவானிசிங், தேசிய ஆலோசகா் விபாவாரி தேஷ்முக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி, வாலண்டினா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் பிராந்தியங்களில் நடைபெற்ற ஓட்டப் பந்தயங்களில் வென்றவா்கள் பலா் இப்போட்டியில் பங்கேற்றனா். ஓட்டப் பந்தயம் சுப்பையா சாலை, அண்ணா சாலை, அஜந்தா சிக்னல், எஸ்.வி.படேல் சாலை வழியாக தொடங்கிய இடத்தை அடைந்தது.

பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் 2 மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவா்கள் தேசிய அளவிளான ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பா் என்றும் தெரிவிக்கப்பட்டது.