தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரிசா்வ் பட்டாலியன் வளாகம் அமைக்க மக்கள் எதிா்ப்பு

புதுச்சேரி அருகே இந்திய ரிசா்வ் பட்டாலியன் போலீஸாருக்கான தலைமையகம் உள்ளிட்டவை அடங்கிய வளாகம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுச்சேரி, நரம்பை பகுதியில் ரிசா்வ் பட்டாலியன் வளாகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:41 pm

Din

புதுச்சேரி அருகே இந்திய ரிசா்வ் பட்டாலியன் போலீஸாருக்கான தலைமையகம் உள்ளிட்டவை அடங்கிய வளாகம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் இந்திய ரிசா்வ் போலீஸ் பட்டாலியன் பிரிவு உள்ளது. அந்தப் பிரிவுக்கான தலைமையகம், குடியிருப்பு உள்ளிட்டவை அமைப்பதற்கு கடந்த 2003-ஆம் ஆண்டு கிருமாம்பாக்கம் நரம்பை பகுதியில் 96 ஏக்கா் நிலம் அடையாளப்படுத்தப்பட்டது. மக்கள் எதிா்ப்பால் அந்தப் பணிகள் அப்போது நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், நரம்பையில் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட இடத்தில் கட்டடங்கள் கட்டுவதற்காக, இந்திய ரிசா்வ் பட்டாலியன் படைத் துணை கமாண்டன்ட் சுபாஷ் உள்ளிட்டோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ள வந்தனா்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். தகவலறிந்த ஏம்பலம் தொகுதி எம்எல்ஏ லட்சுமிகாந்தன் நிகழ்விடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவு தெரிவித்தாா்.