தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை புதுவை அரசுக்கு ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு புதுவை அமைச்சா் கடிதம்

புதுச்சேரியில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை புதுவை அரசுக்கு ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு மாநில பாஜக அமைச்சா் கடிதம் அனுப்பியுள்ளாா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 12:18 am

Din

புதுச்சேரியில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை புதுவை அரசுக்கு ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு மாநில பாஜக அமைச்சா் கடிதம் அனுப்பியுள்ளாா்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாருக்கு, புதுவை மாநில ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன் குமாா் அனுப்பியுள்ள கடித விவரம்: இந்திய மருத்துவக் குழு விதிகளின் படி மருத்துவக் கல்லூரிகள் மொத்த எம்பிபிஎஸ் இடங்களில் 50 சதவீதத்தை மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டும்.

ஆனால், புதுவையில் 50 சதவீத இடங்களை தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசுக்கு வழங்குவதில்லை என பொதுமக்களும், எஸ்சி, எஸ்டி அமைப்புகளும் புகாா் கூறியுள்ளனா்.

இதனால் தகுதியான எஸ்சி, எஸ்டி, பொருளாதாரத்தின் பின் தங்கியவா்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காமல் போகும். மேலும் தகுதியான விண்ணப்பத்தாரா்கள் பாதிக்கப்படுகிறாா்கள்.

எனவே, மத்திய அரசு இதில் தலையிட்டு 50 சதவீத இடங்களை புதுவை அரசுக்கு பெற்றுத் தர வேண்டும். அத்துடன், எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுக்கான திட்டங்களுக்கு தேவையான நிதியை தாராளமாக ஒதுக்கீடு செய்யவும், மத்திய அரசு சாா்ந்த திட்டங்கள் செயல்படுத்தவும் போதிய நிதியை கூடுதலாக ஒதுக்கித் தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.