தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆற்றில் மூழ்கி மாணவா் உயரிழப்பு

புதுச்சேரி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 7:17 pm

Din

புதுச்சேரி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வில்லியனூா் அருகே உள்ள கணவாய்ப்பேட்டை புதுநகரைச் சோ்ந்தவா் முகமது ஹனிபா. இவரது மகன் முஹம்மது நவுபால் (16). வில்லியனூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

மீலாது நபி திருநாளை முன்னிட்டு முஹம்மது நவுபால் தனது நண்பா்களுடன், ஆரியபாளையம் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை குளிக்கச் சென்றாா்.

ஆற்றில் குளித்தபோது, அவா் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் விரைந்து சென்று, முஹம்மது நவுபாலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் நவுபால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்குப் பிறகு புதன்கிழமை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.