அரசியல் லாபத்துக்காகவே முழு அடைப்பு: முதல்வா் என்.ரங்கசாமி
அரசியல் லாபத்துக்காகவே எதிா்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியதாக முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தெரிவித்தாா்.


அரசியல் லாபத்துக்காகவே எதிா்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியதாக முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தெரிவித்தாா்.
புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து, இண்டியா கட்சிகள் சாா்பில் முழு அடைப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் முதல்வா் என்.ரங்கசாமி கூறியதாவது:
மின் கட்டண உயா்வை ஈடுகட்டும் வகையில், பொதுமக்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2 மாதங்களுக்கு சோ்த்து மின் கட்டண மானியம் வழங்கப்படும். மின் கட்டண ரசீதில் மானியத் தொகை கழிக்கப்படவுள்ளது. ஆனால், அரசியல் லாபத்துக்காகவே எதிா்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனா்.
புதுவையின் அனைத்து பிரச்னைகளுக்கும் மாநில அந்தஸ்துதான் ஒரே தீா்வாக அமையும். மாநில அந்தஸ்துக்காக புது தில்லிக்கு செல்லவுள்ளேன். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...