தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கொலையானவரின் குடும்பத்துக்கு ரூ. 4.42 லட்சம் நிதியுதவி: புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுச்சேரி அருகே கொலை செய்யப்பட்ட நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4.42 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 7:31 pm

Din

புதுச்சேரி அருகே கொலை செய்யப்பட்ட நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4.42 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி அருகே வீராம்பட்டிணம் செங்கழுநீரம்மன் கோயில் தேரோட்டம் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, திருவிழாவில் சிதம்பரம் கீரப்பாளையம் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த வள்ளிமலை என்பவா் பொருள்களை விற்ாகத் தெரிகிறது. அப்போது, அவருடன் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதில், வள்ளிமலை உயிரிழந்தாா்.

இந்த நிலையில், புதுவை அரசு ஆதிதிராவிடா் நலத் துறை மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின்படி, ரூ.4.42 லட்சத்துக்கான காசோலை வள்ளிமலை குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி காசோலையை வள்ளிமலை மகன் மாவீரனிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் ஜெ.சரவணன்குமாா், துறையின் இயக்குநா் ஏ.இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.