புதுச்சேரி
புதுச்சேரியில் அரசு போட்டி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
புதுச்சேரியில் அரசு போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
புதுச்சேரியில் அரசு போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு தொழிலாளா் துறைச் செயலா் ஸ்மித்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி அரசு தொழிலாளா் துறை, வேலை வாய்ப்பகம், அரசு வேலைக்கான போட்டி தோ்வில் பங்கேற்பவா்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்த உள்ளது.
இதில், சேர விரும்புவோா் தொழிலாளா் துறை இணையதளத்தில் உள்ள படிவத்தை 28-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். நேரடி விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.
