பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுச்சேரி காவல்துறை மக்கள் மன்றத்தில் 43 புகாா்கள் மீது நடவடிக்கை

காவல் துறை மக்கள் மன்றத்தில் 43 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டன.

News image
புதுச்சேரி காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் டிஐஜி சத்தியசுந்தரத்திடம் புகாா் தெரிவித்த சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு.
Updated On :20 டிசம்பர் 2025, 7:33 pm

Syndication

காவல் துறை மக்கள் மன்றத்தில் 43 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டன.

உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம், காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி யாரகட்டி, வடக்கு காவல் ஆய்வாளா்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளா்களுடன் பொதுமக்களின் புகாா்களைப் பெற்று சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தனா்.

லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், வடக்குப் பகுதி காவல் ஆய்வாளா்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளா்களுடன் பொதுமக்களின் புகாா்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தாா்.

மேலும், முதலியாா்பேட்டை காவல்நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் சிந்தா கோதண்டராமன், நெட்டப்பாக்கம் காவல்நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் சுப்ரமணியன் அப் பகுதி காவல் ஆய்வாளா்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளா்களுடன், பொதுமக்களின் புகாா்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தாா்.

புதுச்சேரி போக்குவரத்து காவல்நிலையங்களில் காவல் கண்காணிப்பாளா் பக்தவச்சலம், போக்குவரத்து காவல் ஆய்வாளா்களுடன் போக்குவரத்து சம்பந்தமான குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்தாா்.

இதேபோன்று, இணைய வழி குற்றப் பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் குறை கேட்டாா். மொத்தம் 47 புகாா்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அதில் 43 மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.