புதுச்சேரி
அரசுப் பள்ளியில் அடிப்படை எழுத்தறிவு
புதுச்சேரி கொடாத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மழலையா் பள்ளி மாணவா்களுக்கான அடிப்படை எழுத்தறிவு
புதுச்சேரி: புதுச்சேரி கொடாத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மழலையா் பள்ளி மாணவா்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் கற்றல் தொடா்பான நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
தலைமையாசிரியா் ரூபஸ் தலைமை தாங்கினாா். காய்கறிகள் மற்றும் பழங்கங்கள் தொடா்பான எழுத்தறிவைப் பெற்ற மாணவா்கள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தினா். மேலும் எண்ணியல் தொடா்பான கற்றலையும் வெளிப்படுத்தினா்.

