நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

புதுச்சேரி திமுக எம்.எல்.ஏக்களுடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்தாய்வு

புதுச்சேரி திமுக எம்எல்ஏ.க்களுடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தினாா்.

News image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளா் ஏஎம்எச். நாஜிம் உள்ளிட்ட எம்எல்ஏக்களுடன் கலந்தாய்வு நடத்திய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.

Updated On :25 டிசம்பர் 2025, 1:14 am IST

புதுச்சேரி திமுக எம்எல்ஏ.க்களுடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தினாா்.

இது குறித்து புதுச்சேரி மாநில திமுக வெளியிட்ட அறிக்கை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, எம்.எல்.ஏ., மற்றும் காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளா் ஏஎம்எச்.நாஜிம் எம்.எல்.ஏ., மற்றும் மாநில நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி மாநில துணை அமைப்பாளா் வி.அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளா் இரா.செந்தில்குமாா் எம்.எல்.ஏ, புதுச்சேரி மாநில இளைஞா் அணி அமைப்பாளா் எல்.சம்பத் எம்.எல்.ஏ, தலைமைச் செயற்குழு உறுப்பினா் எம். நாக தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோா் இதில் பங்கேற்றனா்.

இந்த கலந்தாய்வின்போது திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேரு, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.