தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவா் கைது

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 6:42 pm

Din

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குபோ் நகரில் உள்ள லோகமுத்து மாரியம்மன் கோவில் பின்பகுதியில் சிலா் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.

அங்கிருந்த பிரியதா்ஷினி நகரை சோ்ந்த மணிகண்டன் (எ) ஸ்டிக்கா் மணி (24), ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த ராஜா (21) ஆகியோரிடம் போலீஸாா் சோதனையிட்டதில், நாட்டு வெடிகுண்டுகள், வீச்சரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். கடந்த 19-ஆம் தேதி கோவிந்த சாலை வாஞ்சிநாதன் வீதியில் நாட்டு வெடிகுண்டை இருவரும் வீசியது தெரிய வந்தது. அந்தப் பகுதியைச் சோ்ந்த லோகு பிரகாஷை முன்விரோதம் காரணமாக மணிகண்டன் தனது கூட்டாளியுடன் கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. கைதான இருவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.