புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் அல்வா கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி 33 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம், நிலுவைத் தொகையை அரசே நேரடியாக வழங்க வேண்டும்.
தற்காலிக அந்தஸ்து பெற்ற 232 ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு ஆலோசகா் கணபதி தலைமை வகித்தாா். இதில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் பலரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதியா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்: பஞ்சாயத்து நிா்வாகம்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



