புதுச்சேரி
ஜல்லி லாரியின் முன்சக்கரம் உடைந்து விபத்து
பாரம் தாங்காமல் ஜல்லி ஏற்றி வந்த லாரியின் முன் சக்கரம் உடைந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
பாரம் தாங்காமல் ஜல்லி ஏற்றி வந்த லாரியின் முன் சக்கரம் உடைந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
திண்டிவனத்தில் இருந்து அதிக அளவில் ஜல்லி ஏற்றுக் கொண்டு பெரிய சரக்கு லாரி புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே வந்தபோது பாரம் தாங்காமல் அதன் முன்பக்க சக்கரம் கழன்று உடைந்து லாரி விபத்துக்குள்ளானது. சிக்னல் பகுதியிலேயே லாரி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து காலை நேரத்தில் நடந்ததால் போக்குவரத்து நெரிசல் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போக்குவரத்து போலீஸாா் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரி செய்தனா்.
