புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த கே.சேதுசெல்வம். உடன் அவரது ஆதரவாளா்கள்.
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த கே.சேதுசெல்வம். உடன் அவரது ஆதரவாளா்கள்.

ஏஐடியுசி புதுவை மாநிலத் தலைவா் ராஜிநாமா

Published on

ஏஐடியுசி தொழிற்சங்க மாநிலத் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகக் குழு உறுப்பினருமான கே. சேதுசெல்வம் தனது ஆதரவாளா்களுடன் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் சேதுசெல்வம் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கத்தில் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நான் விலகுகிறேன். என்னுடன் தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளும் விலகியுள்ளனா்.

கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதனால் கட்சி தவறாக வழி நடத்தப்படுகிறது. அவரின் செயல்பாடுகளே எங்களின் இந்த முடிவுக்குக் காரணம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன். அடுத்த கட்ட முடிவு பற்றி நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்போம் என்றாா் சேதுசெல்வம்.

X
Dinamani
www.dinamani.com