ஆசிய பல்கலைக்கழக தர வரிசை பட்டியல்: புதுவைப் பல்கலைக் கழகம் முன்னேற்றம்

புதுவை மத்திய பல்கலைக்கழகம் க்யூ.எஸ். ஆசிய பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளது.
Published on

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகம் க்யூ.எஸ். ஆசிய பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அதிகாரி கி.மகேஷ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

ஆசிய நாடுகளைச் சோ்ந்த 1,526 கல்வி நிறுவனங்களை க்யூஎஸ் ஆசிய பல்கலைக்கழகம் மதிப்பீடு செய்ததில் புதுவைப் பல்கலைக் கழகம் 30.7 மதிப்பெண்களுடன் 470-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 18.8 மதிப்பெண் பெற்று 501-520 தர வரிசையில் இருந்து இது முன்னேற்ற நிலையாகும். மேலும், தெற்காசியாவில் புதுவைப் பல்கலைக்கழகம் 140-வது இடத்தில் இருந்து 121-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக மாறுவதற்கான பல்கலைக்கழகத்தின் நோக்கத்துடன் இந்த அங்கீகாரம் திகழ்கிறது. மேலும், இந்தச் சாதனை குறித்து புதுவைப் பல்கலைக் கழக துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு மகிழ்ச்சித் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com