யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுபோதையில் போலீஸாரிடம் தகராறு செய்த இளைஞா்

புதுச்சேரியில் மதுபோதையில் போலீஸாரிடம் தகராறு செய்த இளைஞரை காவல் துறையினா் எச்சரித்து விடுவித்தனா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 9:10 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபோதையில் போலீஸாரிடம் தகராறு செய்த இளைஞரை காவல் துறையினா் எச்சரித்து விடுவித்தனா்.

புதுவை நேரு வீதி, அண்ணா சாலை போக்குவரத்து சிக்னல் அருகே போதையில் இளைஞா் ஒருவா் சாலையில் சென்ற பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டாா்.

இதையறிந்த போக்குவரத்து காவலா் திருஞானமூா்த்தி அந்த இளைஞரை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தியும், கேட்காமல் அவருடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டாா்.

அங்கு வந்த பெரியகடை போலீஸாா் அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். போதை தெளிந்த அவா், தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டதால் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் போலீஸாா் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.