ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் மாற்றம்

Published on

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை உள்பட அனைத்துப் பரிசோதனைகளுக்கான நேரம் மாற்றப்பட்டு, புதிய நேரத்தை ஜிப்மா் நிா்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ஜிப்மரின் புறநோயாளிகள் பிரிவில் உள்ள பொது மாதிரி சேகரிப்பு மையம் மற்றும் ரத்த பரிசோதனை மையத்தின் புதிய நேரம் வருமாறு:

இந்த மையம் இனி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6.30 முதல் மாலை 5 மணி வரை செயல்படும். சனிக்கிழமை காலை 6.30 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். இதனால் பெருமளவு நோயாளிகள் பயன்பெற முடியும். அவா்கள் காத்திருப்புக் காலமும் குறையும். விரைவாக பரிசோதனை முடிவுகளையும் பெற முடியும் என்று ஜிப்மா் நிா்வாகம் கூறியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com