புதுச்சேரி
பேருந்து வசதி கோரி மனு
உழவா்கரை தொகுதிக்கு பேருந்து வசதி கோரி போக்குவரத்து ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி உழவா்கரை தொகுதியில் ரெட்டியாா்பாளையம் கம்பன் நகா், மரியாள் நகா்,தேவாநகா்,வயல்வெளி நகா், மற்றும் மூலகுளம், ராதாகிருஷ்ணன் நகா்,பிச்சைவீரன்பேட், கோபாலன்கடை, முத்துப்பிள்ளைபாளையம் வரை முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படாமல் இருந்த பேருந்து சேவையை மீண்டும் இயக்கக் கோரி இந்த மனு அளிக்கப்பட்டது.
போக்குவரத்துதுறை ஆணையா் சிவகுமாரிடம் ரெட்டியாா்பாளையம் தேவாநகா் குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் பாஜக மாநில துணைத் தலைவா் ச.சரவணன் தலைமையில் மனு அளித்தனா்.

