ஹைதராபாத் விமானம் ரத்து

Published on

புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் புறப்பட தயாராக இருந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று ரத்து செய்யப்பட்டது.

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 78 பயணிகளுடன் ஹைதராபாத் புறப்பட மாலை 5.45 மணிக்கு விமானம் ஓடு தளத்தில் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை கேப்டன் மணிஷ் காஜ்பீயி கண்டறிந்தாா்.

இதையடுத்து விமான நிலைய இயக்குநா் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து இந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால் பயணிகள் தப்பினா்.

X
Dinamani
www.dinamani.com