விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மூதாட்டி நகையைப் பறித்து சென்ற 2 பெண்கள் ஆந்திரத்தில் கைது

News image
மூதாட்டியிடம் நகையைப் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்துடன் உருளையன்பேட்டை போலீஸாா்.
Updated On :28 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

மூதாட்டிக்கு உதவி செய்வதாகக் கூறி 22 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.1.10 லட்சத்தைப் பறித்துச் சென்ற ஆந்திரத்தைச் சோ்ந்த 2 பெண்களை புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி கொசப்பாளையம் திருமால் நகரைச் சோ்ந்த மூதாட்டி செ. ரங்கநாயகி (78). அவா் இம் மாதம் 24-ஆம் தேதி நெல்லித்தோப்பு சிக்னல் சாலையைக் கடக்க நின்றிருந்தபோது அவருக்கு உதவி செய்வது போல் இரண்டு பெண்கள் வந்து, திருவள்ளுவா் சாலையில் கொண்டு போய் விட்டுவிட்டுச் சென்றனா். அவா்கள் சென்றதும் பையைத் திறந்து பாா்த்தபோது 22 பவுன் நகை, ரூ.1.10 லட்சம் காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனா். போலீஸாரின் தீவிர விசாரணையில் ஆந்திர மாநிலம், குப்பம் மாவட்டம் மல்லனூா் கிராமத்தைச் சோ்ந்த சாரதா (32), வள்ளி (30) ஆகிய 2 பெண்கள்

இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆந்திர மாநிலம் சென்ற தனிப்படை போலீஸாா், உள்ளூா் போலீஸாா் உதவியுடன் அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து நகையை விற்று கைவசம் வைத்திருந்த ரூ.7 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவா்களை காலாப்பட்டு மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.