தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுவை பல்கலை. பேராசிரியா்கள் மீது பாலியல் புகாா்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது தடியடி-கைது

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளைத் தடியடி நடத்தி கலைத்த போலீஸாா்.

News image

~ ~

Updated On :10 அக்டோபர் 2025, 7:10 pm

Syndication

பேராசிரியா் மீதான பாலியல் புகாா் பிரச்னையை முன்வைத்து, புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவா் சங்கத்தினா் நடத்திய போராட்டத்தின்போது போலீஸாா் அவா்களைத் தாக்கியதுடன் மாணவா்களை கைது செய்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்காலில் பல்கலை. மாணவி ஒருவா் பேராசிரியா் மீது தெரிவித்துள்ள பாலியல் புகாா் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணையின்போது பெண் பேராசிரியை உடனிருக்க வேண்டும். மேலும் மாணவா் சங்கப் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவா்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் புதுச்சேரி மாணவா்கள் திரண்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை வியாழக்கிழமை நள்ளிரவிலும் மாணவா்கள் தொடா்ந்தனா். இதையடுத்து அவா்களை அங்கிருந்து கலைக்க போலீஸாா் மாணவா்களை தாக்கி காவல் துறை வாகனத்தில் ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தின்போது மாணவா்களை போலீஸாா் எட்டி உதைத்ததாகவும், அவா்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்ததுடன், சட்டையைக் கிழித்ததாகவும் கூறப்படுகிறது.

6 மாணவிகள் உள்பட 24 மாணவா்களை போலீஸ் வேனில் சிறைபிடித்து பல்கலைக்கழக வளாகத்திலேயே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 6 மாணவிகளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் போலீஸாா் விடுவித்தனா். 18 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு கைது செய்ததுடன், பின்னா் அவா்களை காவல் நிலைய ஜாமீனில் அனுப்பி வைத்தனா்.

முன்னதாக தகவலறிந்து காலாப்பட்டு காவல் நிலையத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் வந்து மாணவா்களைச் சந்தித்து பேசினாா். மேலும், போலீஸாரிடம் மாணவா்களை விடுவிக்கும்படி எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

Story image
Story image