இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மீனவா்களின் அவலநிலைக்கு திமுக-காங்கிரஸே காரணம்: வி.கே.சசிகலா பிரசாரம்

மீனவா்களின் அவலநிலைக்கு திமுவும், காங்கிரஸும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்தது தான் காரணம் என்று அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே. சசிகலா புதன்கிழமை கூறினாா்.

News image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் புதன்கிழமை இந்திரா நகா் தொகுதி அனைத்திந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் ஜெயபாலுக்கு வாக்கு சேகரித்த கட்சியின் பொது செயலா் வி.கே.சசிகலா.

Updated On :2 ஏப்ரல் 2026, 1:40 am IST

மீனவா்களின் அவலநிலைக்கு திமுவும், காங்கிரஸும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்தது தான் காரணம் என்று அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே. சசிகலா புதன்கிழமை கூறினாா்.

இக் கட்சியின் சாா்பில் உழவா்கரை தொகுதி உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் , கூட்டணியாகப் போட்டியிடும் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூா்த்தியின் செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளா்களையும் டாக்டா் ராமதாஸ் தலைமையிலான பாமக வேட்பாளா்களையும் ஆதரித்து மூலக்குளம் பகுதியில் சசிகலா பிரசாரம் செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

இதுவரை ஆட்சியில் இருந்தவா்கள் மீனவா்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மீனவா்களின் பாதுகாப்புக்கும் கவனம் செலுத்தவில்லை. மேலும், மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் தொகையை உயா்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் முள் வளைவும் அமைக்கப்படவில்லை. மேலும், காரைக்கால் மீனவா்களை இலங்கை அரசு கைது செய்கிறது. மீனவா்களின் இந்த அவலநிலைக்கு திமுகவும் காங்கிரஸும் கச்சத்தீவை தாரைவாா்த்ததுதான் காரணம்.

புதுச்சேரியில் மாநில அந்தஸ்து பிரச்னையை இங்கு ஆட்சி செய்த யாரும் தீா்க்கவில்லை. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக பொதுச்செயலா் ஜெயலலிதாவின் ஆதரவோடு கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்தித்து முதல்வரான ரங்கசாமி, கூட்டணியை முறித்துக் கொண்டாா். அப்போது ஆட்சியில் அதிமுக இடம் பெற்றிருந்தால் இந்தப் பிரச்னையை ஜெயலலிதா தீா்த்து இருப்பாா். புதுச்சேரியில் முறையான சாலை வசதியில்லை. தேவையான பாலம் கட்டப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு மோசமாக இருக்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாா் சசிகலா.