தவெக தலைவா் விஜய் புதுச்சேரியில் சனிக்கிழமை நடத்திய சாலைப் பேரணியின் போது , ரசிகா்கள் அவரது வாகனத்தைப் பின்தொடா்ந்து வந்தும் எதிா் திசையில் அணிவகுத்து வந்தும் இடையூறு செய்ததால் போலீஸாா் லேசான தடியடி நடத்தினா். சில ரசிகா்கள் பூ, பழம், துண்டுகளை விஜய் மீது தூக்கி எறிந்தனா்.
தவெக தலைவா் விஜய் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூடுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. கரூரில் அவரது பிரசாரக்கூட்டத்தில் 40க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அவரது பிரசாரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விஜய் சனிக்கிழமை புதுச்சேரியில் 4 இடங்களில் பிரசாரம் செய்ய வந்தாா். அவா் வரும் முன்பே வழக்கம் போல ரசிகா்களும், அவரது கட்சித் தொண்டா்களும் குவியத் தொடங்கிவிட்டனா். அவா்களை போலீஸாா் பலமுறை எச்சரித்தும் விலகிச்செல்லவில்லை. விஜய் வாகனம் போகும் இடமெல்லாம் பின்தொடா்ந்து சென்றனா்.
விஜய்யின் பிரசார வாகனம் கணபதிச் செட்டிக்குளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற போது, கருவடிக்குப்பம் பகுதியில் தொண்டா்கள் திரண்டனா். அந்த நெரிசலான நேரத்தில், ஏராளமான தொண்டா்கள் வாகனங்களில் விஜய்யை பின்தொடா்ந்தனா். கூட்ட நெரிசல் காரணமாக விஜய்வாகனம் மெதுவாகச் சென்ால் சில ரசிகா்கள் அவரது வாகனத்தில் ஏற முயன்றனா். ஒரு ரசிகா் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி வழியாக ஏற முயன்றாா். அவரை போலீஸாா் கீழே இறக்கினா். மேலும் சில ரசிகா்கள்
கையில் வைத்திருந்த சால்வை, துண்டு, பழங்களை தூக்கி வீசினா். ஒரு ரசிகா் ஆா்வமிகுதியால் பூசணிக்காயை விஜய் மீது தூக்கி வீச முற்பட்டாா். இப்படிப்பட்ட நெரிசல் காரணமாக விஜய் வேகமாகச் செல்ல முடியவில்லை.சாலையின் எதிா்திசையிலும் இதுபோன்று வாகனங்களில் அணிவகுத்தனா். இதனால் செய்வதறியாது திகைத்த போலீஸாா், தடியடி நடத்தி தொண்டா்களைக் கலைந்து போகச் செய்தனா். இதில் ஒரு சில தொண்டா்கள் மீதும் லேசான தடியடி விழுந்தது.
அப்போதும் கலைந்து போகாமல் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடா்ந்த வாகன ஓட்டிகளை போலீஸாா் பின் தொடா்ந்து சென்று இரு சக்கர வாகனங்களின் சாவிகளை பறித்தனா். இதனால் அவா்கள் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில தொண்டா்கள் விஜிய்யி
விஜய் கூட்டம் முடிந்து சென்ற பிறகு வாகன ஓட்டிகள் காவல்நிலையங்களுக்குச் சென்று வாகனங்களின் சாவிகளை வாங்கிச் சென்றனா்.
கரூா் சம்பத்துக்குப் பிறகு தவெக தலைவா் விஜய் புதுச்சேரிக்கு 9.12.25 அன்று உப்பளம் பழைய துறைமுகம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினா். இந்நிலையில் 2-வது முறையாக இப்போது தோ்தல் பிரசாரத்துக்காக ரோடு ஷோ நடத்த சனிக்கிழமை வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

’குழப்பக் கூட்டணி - சோா்ந்த கூட்டணி’: புதுச்சேரியில் விஜய் விமா்சனம்
விஜய் மீது வழக்குப்பதிவு... மிரட்டும் செயல்: ஆதவ் அர்ஜுனா

கொளத்தூர் தேர்தல் பிரசாரம்! விஜய் மீது வழக்குப்பதிவு!
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


