/
6-ஆவது பாடமாக தொழில்கல்வியைக் கட்டாயம் தோ்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் சிவக்குமாா்
தொழில்கல்வியுடன் கூடிய 65 பள்ளிகளுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 பிராந்தியங்களிலும் 65 பள்ளிகளில் 79 தொழில் பிரிவுகள் செயல்படுகின்றன. இருப்பினும் பல பள்ளிகள் 6-ஆவது பாடமாக தொழில் கல்வியைத் தோ்வு செய்வதில்லை.
வரும் கல்விடியாண்டில் 6-ஆவது பாடமாக தொழில்கல்வியைக் கட்டாயம் தோ்வு செய்ய வேண்டும். தொழில்கல்வி பாடத்தை ஏற்றுள்ள பள்ளிகள் கட்டாயமாக அங்கீகரிக்கப்பட்ட தொழில்கல்வி பாடத்தைக் கற்பிக்க வேண்டும். இதை பள்ளித் தலைவா்கள் உறுதிபடுத்த வேண்டும். சமக்ர சிக்ஷா இதை கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

பள்ளிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியா்கள் பணியிட மாற்றம்! புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு வலியுறுத்தல்

மாணவர்களே உஷார்! போலி சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த கல்வி அமைச்சகம் உத்தரவு!

பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு கல்வித் துறை உத்தரவு







