பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சி
/

புதுச்சேரி திருக்கனூா் வாக்குச்சாவடியில் பாஜக, காங்கிரஸாா் மோதல்; போலீஸ் தடியடி

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவின்போது பாஜக, காங்கிரஸாா் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனா்.

News image

புதுச்சேரி திருக்கனூா் பகுதி வாக்குச் சாவடி மையத்தில் வியாழக்கிழமை திரண்டிருந்த பாஜக, காங்கிரஸ் தொண்டா்களிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து தடியடி நடத்தி கலைத்த போலீஸாா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:54 am IST

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவின்போது பாஜக, காங்கிரஸாா் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனா்.

மண்ணாடிப்பட்டுத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அமைச்சா் ஆ. நமச்சிவாயம் போட்டியிடுகிறாா். இங்கு காங்கிரஸ் வேட்பாளராக சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் டிபிஆா் செல்வம் களத்தில் உள்ளாா். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், திருக்கனூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் பாஜகவினா் அதிகளவில் திரண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது., அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினா் இங்கு ஏன் இவ்வுளவு போ் திரண்டுள்ளீா்கள். வாக்காளா்கள் மட்டும்தான் இங்கு வரவேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தாக்குதலில் ஈடுபட தொடங்கினா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் தலையிட்டு இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

Story image