இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

News image

நீட் தேர்வு - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:58 am IST

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தோ்வுக்கான அனுமதி சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லுாரிகளில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கு மாணவா்கள் சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் 552 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளிலும் இந்த நீட் தோ்வு மே 3 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது.

நீட் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.