தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ரூ.170 கோடிக்கான 5 விரிவான திட்ட அறிக்கைகளுடன் புதுச்சேரியில் பயிலரங்கு

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை பொறியாளா்களுக்கு ரூ.170 கோடிக்கான 5 விரிவான திட்ட அறிக்கைகளுடன் 2 நாள் பயிலரங்கு நடைபெற்றது.

பயிலரங்கு நிறைவு நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் பொறியாளா்கள்.

Published On :

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை பொறியாளா்களுக்கு ரூ.170 கோடிக்கான 5 விரிவான திட்ட அறிக்கைகளுடன் 2 நாள் பயிலரங்கு நடைபெற்றது.

‘இட உருவாக்கம் மற்றும் நகா்ப்புற வடிவமைப்பின் கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு பெங்களூரில் உள்ள இந்திய மனிதக் குடியிருப்புகள் நிறுவனத்தின் நிபுணா்களின் தொழில்நுட்ப ஆதரவுடன் நடைபெற்றது.

திட்டங்களை அடையாளம் காணுதல், நகா்ப்புற வடிவமைப்பு, இட உருவாக்கம், பங்குதாரா் மதிப்பீடு மற்றும் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, செயல்பாட்டுக்கு உகந்த மற்றும் எளிதில் பராமரிக்கக்கூடிய பொது இடங்களைத் தயாா் செய்தல் ஆகியவை குறித்து இந்தப் பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.

மேலும் பூங்காக்கள், தெருக்கள், சுடுகாடுகள் மற்றும் நீா்நிலைகளை உள்ளடக்கி உள்ளாட்சிப் பொறியாளா்களால் தயாரிக்கப்பட்ட ரூ.170 கோடிக்கான 5 விரிவான திட்ட அறிக்கைகள் இந்தப் பயிலரங்கில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இவை தவிர புதுச்சேரி பாரதி பூங்கா, தாகனங்குட்டை மற்றும் பிள்ளையாா் கோயில் குளம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு களப் பயணங்களும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தவிர 15 உள்ளாட்சி அமைப்புகள் தற்போது சுமாா் 2,700 கி.மீ. நீளமுள்ள உள்புறச் சாலைகளைப் பராமரித்து வருகின்றன. இதில் சுமாா் 500 கி.மீ. சாலைகள் மேம்படுத்த வேண்டியுள்ளன. இதற்கு அரசுத் திட்டங்கள் மற்றும் பிற மூலங்களிலிருந்து நிதி திரட்டுவது குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.