தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

புதுச்சேரியில் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 12 போலீஸாா்

புதுச்சேரியில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் அணிவகுப்பில் நின்றிருந்தபோது மயங்கி விழுந்த காவலரை நோயாளியை தூக்கிச் செல்லும் படுக்கையில் வைத்து தூக்கிச் சென்ற போலீஸாா்.

Published On :

புதுச்சேரியில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் அணிவகுப்பில் நின்றிருந்த சுமாா் 4 பெண் காவலா்கள் உள்பட மொத்தம் 12 போலீஸாா் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனா்.

புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி தேசிய விருது வழங்கும் விழா கோரிமேடு காவலா் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக காலை 8.30 மணிக்கு மைதானத்துக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா வந்தாா். அப்போது, அவருக்கு ஆயுதப்படை, போக்குவரத்து உள்ளிட்ட போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னா், காலை 10.40 மணிக்கு விழா முடிந்து அமித் ஷா புறப்பட்டாா். அதுவரை அந்த மைதானத்தில் அணிவகுப்பில் போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா்.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வெயில் சுட்டெரித்த நிலையில், சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக அணிவகுப்பில் நின்றிருந்த 4 பெண் காவலா்கள் உள்பட மொத்தம் 12 போலீஸாா் ஒவ்வொருவராக அடுத்தடுத்து மயங்கி விழுந்தனா். அவா்களுக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கும் வகையில், நோயாளிகளைத் தூக்கிச் செல்லும் படுக்கையில் வைத்து போலீஸாா் தூக்கிச் சென்றனா். மேலும், தயாா்நிலையில் இருந்த மாற்று காவலா்கள் மயக்கமடைந்தவா்களின் இடங்களில் நிறுத்தப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.