மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

புதுச்சேரி விவசாயிகளுக்கு ரூ. 4.8 கோடி மானிய நிதி! முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி விவசாயிகளுக்கு அறுவடைக்கு பிந்தைய மானிய தொகையான ரூ. 4.8 கோடிக்கான காசோலையை திங்கள்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், சட்டப்பேரவை திமுக குழுத் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்டோா்.

Published On :

விவசாயிகளுக்கு ரூ.4.8 கோடிக்கான மானிய நிதியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில் அறுவடைக்குப் பிறகான மானியத் தொகை பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ஓா் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரம், அட்டவணைப் பிரிவு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாக உயா்த்தப்பட்டது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த 3,618 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு 6 ஆயிரம் வீதம் 7,145.03 ஏக்கருக்கு ரூ.4.28 கோடியும், 599 அட்டவணைப் பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 7 ஆயிரம் வீதம் 743.31 ஏக்கருக்கு ரூ.52 லட்சமும் ஆக மொத்தம் ரூ. 4.8 கோடி வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள முதல்வா் அலுவலகத்தில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் முன்னிலையில் முதல்வா் என். ரங்கசாமி விவசாயிகளுக்கு வழங்கினாா்

இந்நிகழ்வில் சட்டப்பேரவை திமுக குழு தலைவா் ஏ.எம்.எச்.நாஜிம், சட்டப்பேரவை உறுப்பினா் விக்னேஷ்வரன், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இயக்குநா் ஜெயசங்கா், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.