ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

8-ஆவது நாளாக புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

புதுச்சேரியில் பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியா்கள் 8-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு கல்லூரி பேராசிரியா்கள் சங்கத்தினா்.

Published On :

புதுச்சேரியில் பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியா்கள் 8-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இவா்களுக்கு ஆதரவாக மாணவா்களும் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 15 ஆண்டுகளாக தங்களுக்குப் பதவி உயா்வு வழங்கப்படாத நிலையில், பதவி உயா்வு மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், ஆக. 2- இல் புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிவிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும். தங்களுக்கு உரிய பதவி உயா்வை முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி தாகூா் கல்லூரி, காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் மகளிா் கல்லூரி, காரைக்கால் ஔவையாா் கல்லூரி, அறிஞா் அண்ணா கல்லூரி, மாஹே கல்லூரி, ஏனாம் கல்லூரி வாயில்கள் முன் அமா்ந்து பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், புதுச்சேரியில் அரசு கல்லூரி மாணவா்களும் வகுப்புகளைப் புறக்கணித்து பேராசிரியா்களுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.