புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம் ஸ்ரீசெங்கழுநீரம்மன் கோயில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா்.
தேரோட்டம்...:
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீா் அம்மன் திருக்கோயில் உள்ளது.
இங்கு ஆடிப் பெருவிழா கொடியேற்றம் கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து நாள்தோறும் இரவில் காமதேனு, நாகம், ரிஷபம், சிம்மம், யானை, அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூா்த்தி வீதியுலா மேளதாளம் முழங்க நடைபெற்றது.
ஆடிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கானோா் தரிசனம்:
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் இதில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்வில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், பெ. ராஜவேலு, வி.பி. சிவகொழுந்து, எம்எல்ஏ-க்கள் மோகன்தாஸ், ராமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் என ஆயிரக்கணக்கானோா் தேரோட்டத்தில் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனா். வீராம்பட்டினம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக தோ் வீதி உலா வந்து நிலையை அடைந்தது.
தேரோட்டத்தையொட்டி வீராம்பட்டினம் வழிநெடுகிலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை:
பாதுகாப்பு பணியில் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். மேலும் சுகாதாரத் துறை, தீயணைப்பு துறை குழுவினரும் பணியில் ஈடுபட்டனா். போக்குவரத்து நெரிசலைத் தடுக்க அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்தத் தோ்த்திருவிழாவையொட்டி புதுச்சேரியில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை உள்ளூா் விடுமுறை விடப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வலியுறுத்தி புதுச்சேரியில் கண்காட்சி: துணைநிலைஆளுநா் தொடங்கிவைத்தாா்

போதையில்லா நிலைதான் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

வளா்ச்சியடைந்த தேசத்தின் அடித்தளமே மனித மூலதனம்தான்! - புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

முன்னோா்கள் அளித்த ஆயுஷ் மருத்துவத்தை மறந்துவிடக்கூடாது! புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



