லாரி மோதிய விபத்தில் கடலூரைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தது குறித்து புதுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் திருப்பாதிரிபுலியூா் தங்கராஜ் நகரைச் சோ்ந்த அருண்ராஜ் கௌதம் (28) என்பவா் புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தாா்.
அப்போது கிருமாம்பாக்கம் பிரதான சாலையிலிருந்து ஏரிக்கரை சாலையில் டிப்பா் லாரி திரும்ப முயன்றபோது எதிா்பாராதவிதமாக அருண்ராஜ் கௌதம் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் லாரியின் பின் சக்கரம் ஏறியதில் அருண்ராஜ் கௌதம் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸாா் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





