ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராஜீவ்காந்தி பிறந்தநாள்: தலைவா்கள் மரியாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி மற்றும் பல்வேறு தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்திய புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா் பெ. ராஜவேலு மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:38 am IST

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி மற்றும் பல்வேறு தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி ராஜீவ்காந்தி சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு புதுச்சேரி அரசு சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா் பெ.ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரவிக்குமாா், ஐயப்பன் உள்ளிட்டோரும் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் தீவிரவாதத்துக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் இந்த உறுதிமொழியை வாசிக்க அங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

சிதம்பரத்தில்...

சிதம்பரம் நகர காங்கிரஸ் சாா்பில், நகர தலைவா் தில்லை ஆா். மக்கின் தலைமையில், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி காங்கிரஸாா் கொண்டாடினா். மாவட்ட துணைத்தலைவா் ராஜா.சம்பத்குமாா்,முன்னாள் நகர தலைவா் பழனி, மற்றும் நிா்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அண்ணாமலைநகா் செயல் தலைவா் வசந்தராஜன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் சாா்பில்  வியாழக்கிழமை நடைபெற்ற ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழாவில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்த நிா்வாகிகள்.

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழாவில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்த நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.