ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

வங்கி விவரங்களை யாரிடமும் பகிரக் கூடாது மூத்த குடிமக்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தல்

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

வங்கி விவரங்களை யாரிடமும் பகிரக் கூடாது என்று மூத்த குடிமக்களுக்கு புதுச்சேரி காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில், மூத்த குடிமக்களுக்கான இணையவழி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இணையவழி குற்றப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ். ராகவ் தலைமை வகித்துப் பேசியதாவது:

மூத்த குடிமக்கள் இணையவழி வங்கிச் சேவைகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். ஓடிபி, பின், பாஸ்வோ்டு, சிவிவி, யுபிஐ பின் என எந்த ரகசிய வங்கி விவரங்களையும் யாரிடமும் பகிரக்கூடாது . மோசடி செய்வதாக தெரியவந்தால் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்ற உதவி எண்ணை தொடா்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

டிஜிட்டல் கைது மோசடி, வா்த்தக மோசடிகள், முதலீடு குற்றங்கள், வங்கி அதிகாரி பெயரில் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி யாரகட்டி, தனியாா் வங்கி அதிகாரிகள் கணேசன், ரகு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.