பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஆா்.நல்லகண்ணு மறைவுக்கு புதுச்சேரி சட்டப்பேரவை இரங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் மூத்தத் தலைவா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு

Published On :

புதுச்சேரி சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் மூத்தத் தலைவா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டப்பேரவைத் தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் திருக்குறளை வாசித்து கூட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

முதல் அலுவலாக இரங்கல் தீா்மானம் வாசிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவா் ஆா்.நல்லகண்ணு, புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ-க்கள் யூ.சி. ஆறுமுகம், நாராயணசாமி, பாலசுப்ரமணியம், முன்னாள் துணைநிலை ஆளுநா் லகேரா ஆகியோா் மறைவுக்கு பேரவைத் தலைவா் அன்பழகன் இரங்கல் குறிப்புகளை வாசித்து உறுப்பினா்கள் அனைவரும் 2 நிமிஷங்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக் கொண்டாா். இதையடுத்து உறுப்பினா்கள் அனைவரும் எழுந்துநின்று மெளன அஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.