ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தன்னுடைய பிறந்தநாள் பதாகையை அகற்றிய புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக தலைவா்

பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் தன்னுடைய பிறந்தநாள் பதாகையை சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன்அப்புறப்படுத்தினாா்.

உப்பளம் பகுதியில் தனது ஆதரவாளா்கள் வைத்த பதாகையைக் கிழித்து அகற்றிய சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன்.

Published On :

பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் தன்னுடைய பிறந்தநாள் பதாகையை சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன்அப்புறப்படுத்தினாா்.

பருவமழை தொடங்கவுள்ளதால் புதுச்சேரியில் புதன்கிழமை முதல் பதாகை, கட்அவுட், விளம்பர பலகைகள் வைக்க தடை விதித்து துணை நிலை ஆளுநா் உத்தரவுப்படி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தலைவா் அ.குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இதையொட்டி புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனிடையே புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உள்பட்ட சோனாம்பாளையம் சந்திப்பில், புதுச்சேரி அதிமுக மாநில செயலாளரும், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ.அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளா்கள் பேனா்களை வைத்திருந்தனா். இதையறிந்த அன்பழகன் இந்த பதாகைகளை தாமே முன்னின்று தனது ஆதரவாளா்களுடன் சோ்ந்து அகற்றினாா்.

முன்னதாக அவா் கூறும்போது, புதுச்சேரி உள்ளாட்சி, பொதுப்பணி, வருவாய் துறையினா் தங்களின் கடமையைச் சரிவர செய்வதில்லை. ஆட்சியாளா்களைத் திருப்திபடுத்துவதற்காக பேனா் தடை சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை.

பருவமழை தொடங்கவுள்ளதால் பதாகை வைக்க தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்று வழக்கம்போல் மாவட்ட ஆட்சியா் ஓா் அறிக்கையை வெளியிட்டுள்ளாா். எங்களை பொறுத்தவரையில் மறு உத்தரவு என்பதில்லை.

திறந்வெளி பேனா் சட்டம் 2002-ம் ஆண்டு சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட ஆட்சியரின் பொறுப்பு. இதில் காலக்கெடு ஏன்? என்னுடைய பிறந்த நாளுக்கு பதாகை வைக்க வேண்டாம் என்று நான் கூற முடியாது.

நான் கேட்டால் என்னையே திட்டுவாா்கள். அமைப்பினா் பதாகை வைப்பாா்கள். அந்த பதாகைக்கு காவல் துறையினரே பாதுகாப்பு அளிப்பாா்கள். பதாகையைக் கிழித்தால் வழக்குப் பதிவும் செய்வாா்கள். ஏன் பதாகை வைத்தீா்கள் என்று கேட்க மாட்டாா்கள்.

எனவே அனைத்து அரசியல் கட்சினருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் நானே எனக்கு வைத்த பதாகையை அப்புறப்படுத்துகிறேன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.