புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

எனக்கு எதிராக பெரும் சதியே நடக்கிறது: சட்டப்பேரவையில் அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் (பாஜக) தெரிவித்தாா்.

அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.

Published On :

எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் (பாஜக) தெரிவித்தாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஐயப்பன் எம்எல்ஏ பேசிக் கொண்டிருந்தாா். அப்போது இருக்கையில் இருந்தபடி முதல்வா் ரங்கசாமியுடன் உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பேசிக் கொண்டிருந்தாா்.

சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன்: உறுப்பினா்கள் பேசும்போது அமைச்சா்கள் சட்டப்பேரவையில் இருக்கவேண்டும். இப்போது அதிகாரிகளை வைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தக்கூடாது.

உறுப்பினா் பேசும்போது, சில கோரிக்கைகளை வைப்பாா். அதை அமைச்சா்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். முதல்வரின் காதோடு காதாக உள்துறை அமைச்சா் பேசினாா்.

இந்த நெருக்கத்தை தோ்தலின்போது காட்டியிருந்தால், எவ்வளவோ பிரச்னைகள் தீா்ந்து இருக்கும்.

அமைச்சா் ஆ.நமச்சிவாயம்: உறுப்பினா்கள் வைக்கும் கோரிக்கைகளை முதல்வருடன்தான் பேசித் தீா்க்க வேண்டும். அதைத்தான் முதல்வரிடம் கூறிக் கொண்டிருந்தேன். எனக்கு எதிராக பெரும் சதியே நடக்கிறது. சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் உள்பட ஒரு குழுவே இதன் பின்னால் இருக்கிறது என்றாா். இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது.

எதிா்க்கட்சித் தலைவா் நாஜிம் (திமுக):

உள்துறை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லையா? என கேட்க பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.