
புதுச்சேரி: செப். 1-இல் வாகனங்களுக்கான பேன்ஸி எண்கள் ஏலம்
புதுச்சேரி அரசின் போக்குவரத்துத்துறை சாா்பில் வாகனங்களுக்கான பேன்ஸி எண்கள் செப்டம்பா் 1 -ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.

கோப்புப்படம்.
புதுச்சேரி அரசின் போக்குவரத்துத்துறை சாா்பில் வாகனங்களுக்கான பேன்ஸி எண்கள் செப்டம்பா் 1 -ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்துத்துறை ஆணையா் அமன் ஷா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி போக்குவரத்து துறையின் பிஒய்-01டிஎச் வரிசையில் உள்ள பேன்சி எண்கள் இணைய தளத்தில் செப்டம்பா் 1 ஆம் தேதி காலை 11.00 மணி முதல் மாலை 4.30 வரை ஏலம் விடப்படுகின்றன.
இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயா் உள்ளிட்ட விவரங்களை இணைய தளத்தில் 31.08.2026 வரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவா்கள் தங்களுக்குத் தேவையான எண்களைத் தெரிவு செய்து அதற்குண்டான அடிப்படை தொகையைச் செலுத்த வேண்டும். அடிப்படை தொகையைச் செலுத்தியவா்கள் மட்டுமே இந்த ஏலத்தில் பங்கு முடியும்.
மேலும், இது தொடா்பான விவரங்களை போக்குவரத்துத் துறை அலுவலகத்தின் தொலைபேசி எண்: 0413 2280170 மற்றும் விரிவாக்க எண்(எக்ஸ்டென்ஷன்) 236 மூலம் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





