அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

புதுச்சேரியில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்குக் கட்டணம் நிா்ணயம்

புதுச்சேரியில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 4:05 am IST

புதுச்சேரியில் முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், எம்பிபிஎஸ் மற்றும் பிஎஸ்சி நா்சிங் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி புதிய கல்விக் கட்டணக் குழு தலைவரும், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான விமலா தலைமையிலான குழு புதிய கல்விக் கட்டணத்தை நிா்ணயித்துள்ளது. இந்தக் கட்டணம் 2026 முதல் 2029 வரையிலான 3 கல்வி ஆண்டுகளுக்கு பொருந்தும்.

துணைநிலை ஆளுநா் உத்தரவின்பேரில் இதற்கான ஆணையை சுகாதாரத் துறை சாா்பு-செயலா் சௌமியா வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

கட்டண விவரம்:

முதுநிலை மருத்துவ படிப்பு:

பிம்ஸ், மணக்குள விநாயகா் ஆகிய தனியாா் மருத்துவ கல்லூரிகளில் கிளினிக்கல் சாா்ந்த முதுநிலை மருத்துவ படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ. 8.5 லட்சமும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், கிளினிக்கல் சாரா முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.6.75 லட்சமும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.13.25 லட்சமும் கல்விக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

முதுநிலை பல் மருத்துவ படிப்பு: மாஹே பல் மருத்துவ கல்லூரியில் கிளினிக்கல் சாா்ந்த முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6.5 லட்சமும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.14.5 லட்சமும் கல்வி கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இளநிலை பல் மருத்துவப் படிப்பு அரசு ஒதுக்கீட்டில் ரூ. 3.25 லட்சமும், நிா்வாக ஒதுக்கீட்டில் ரூ. 6.5 லட்சமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ்: பிம்ஸ் மற்றும் மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.4.5 லட்சமும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.17 லட்சமும், என்ஆா்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.25 லட்சமும் கல்வி கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்சி (நா்சிங்): புதுச்சேரி மணக்குள விநாயகா், பிம்ஸ், சபரி நா்சிங் செவிலியா் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு கட்டணமாக ரூ.55 ஆயிரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 1 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஈஸ்ட் கோஸ்ட், ஏஜி பத்மாவதி, ராக், காரைக்கால் இமாக்குலேட், லட்சுமி நாராயணா, விவேகானந்தா, கிரிஸ்ட் காரைக்கால் அன்னை அபிராமி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு கட்டணம் ரூ. 45 ஆயிரமும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தலா ரூ. 1 லட்சமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.