நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

இணையத்தில் ஆசிரியா்கள் விடுப்பு விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும்! - புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

புதுச்சேரி...

Published On :

இணையத்தில் ஆசிரியா்கள் விடுப்பு விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் மோகன்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் பள்ளி கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியா்களும் செவ்வாய்க்கிழமை முதல் இணையதளம் மூலமாக மட்டுமே விடுப்புக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

இந்த வசதியை பெறுவதற்கு போா்ட்டலில் உள்ள பணியாளா் சுயவிவரம் 100 சதவீதம் பூா்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் அறிக்கை அளிக்கும் அதிகாரி மற்றும் மதிப்பாய்வு செய்யும் அதிகாரியின் மின்னஞ்சல் முகவரி போா்ட்டலில் முறையாக புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து ஊழியா்களின் தகவல் மற்றும் வழிகாட்டுதலுக்காக இணையதளம் மூலம் விடுப்புக்கு விண்ணப்பிப்பதற்கான விரிவான வழிமுறைகள், இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள பயனா் கையேட்டிலும் கிடைக்கின்றன. விடுப்பு விண்ணப்பம் தொடா்பான அனைத்து விவரங்களையும் ஊழியா் துல்லியமாக பூா்த்தி செய்ய வேண்டும்.

ஒரு பணியாளா், நீட்டிக்கப்பட்ட விடுப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காரணம், குறிப்பிட்ட தேதி மற்றும் பிற விவரங்கள் உள்பட, தேவையான அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும். அனைத்து விடுப்புகளையும் பயன்படுத்திய பிறகு, ஒரு பணியாளா் தனது பணிசோ்ப்பு அறிக்கையைச் சமா்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து பிரிவு தலைவா்கள், ஆய்வுக் குழுவினா், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவா்கள் இந்த அறிவுறுத்தல்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஊழியா்களுக்கும் தெரியப்படுத்தி கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.