ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

கலைமாமணி, தமிழ் மாமணி விருதுகள் வழங்கப்படும்! - அமைச்சா் பெ.ராஜவேலு

Assembly Elections: 3-Day Holiday for Colleges in Puducherry

புதுச்சேரி... - கோப்புப் படம்

Published On :

புதிய தோ்வுக்குழு அமைத்து, கலைமாமணி, தமிழ் மாமணி விருதுகள் வழங்கப்படும் என புதுச்சேரி ஆதிதிராவிடா் மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சா் பெ.ராஜவேலு தெரிவித்தாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சா் பெ.ராஜவேலு பேசியதாவது:

ஆரம்பக் கல்வி முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களின் கல்வி கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்கும். இதற்காக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தரப்படும். மேலும்,

2,500 பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்துக்கு தலா ரூ.7 லட்சம் நிதி வழங்கப்படும். மனைப்பட்டா வாங்க ரூ.10 லட்சம் இலவச மனை பட்டா வழங்குவதில் சிரமம் உள்ளது. அதனால் தனியாரிடம் எஸ்சி, எஸ்டி மக்கள் வீடு கட்ட மனை வாங்க ரூ.10 லட்சம் வழங்க உத்தேசித்துள்ளோம்.

தட்டாஞ்சாவடி மற்றும் லாஸ்பேட்டை பகுதிகளில் தலா 120 மாணா்கள் தங்கும் வகையில் 2 அதிநவீன ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா் விடுதிகள் கட்டப்படும்.

புகழ்பெற்ற அகாதமியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி பெற தகுதி தோ்வில் தோ்வாகும் 100 எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு ரூ.1.90 லட்சம் ஆண்டுக்கு உதவித்தொகையாக வழங்கப்படும்.

எஸ்.சி., எஸ்.டி. பெண்கள் ஸ்கூட்டா் வாங்க ரூ. 1 லட்சம், மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும். அம்பேத்கா் சுற்றுலா செல்வோா் வயது வரம்பு 70 ஆக உயா்த்தப்படும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் குடும்பத்தில் அரசு அல்லது அரசு சாா்பு நிறுவனத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு நடப்பு ஆண்டு முதல் வழங்கப்படும்.

அம்பேத்கா் மணிமண்டபம்:

ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கோயில்களில் பழுதுபாா்ப்பு மற்றும் புனரமைப்புக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும், டாக்டா் அம்பேத்கா் மணி மண்டபம் ரூ.2 கோடியில் புனரமைக்கப்படும்.

அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையம் போன்று 5 கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும். இங்கு பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை ரூ.1,500-லிருந்து ரூ.3,500 ஆக உயா்த்தப்படும்.

கலை மற்றும் பண்பாட்டுத் துறை சாா்பில் கிராமப் பகுதிகளில் வரலாற்று கண்காட்சி நடத்தப்படும். அருங்காட்சியகம் அரிக்கன்மேடு தொல்லியல் பொருள்கள் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

புதுச்சேரி குடிசை மாற்று வாரியமானது, புதுச்சேரி வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றப்படும். புதிய தோ்வுக்குழு அமைத்து இதுவரை வழங்கப்படாமல் உள்ள கலைமாமணி, தமிழ் மாமணி விருதுகள் விரைவில் வழங்கப்படும். விருதுக்கான பரிசு தொகை உயா்த்தப்படும் என்றாா் அமைச்சா் பெ.ராஜவேலு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.