நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிப். 12-இல் புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்: முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை பிப். 12-இல் முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்.

News image

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம். உடன் பேரவைச் செயலா் ஜெ.தயாளன்

Updated On :3 பிப்ரவரி 2026, 8:48 pm

Syndication

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை பிப். 12-இல் முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்.

இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டம் பிப். 12-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2026- 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்.

இதைத் தவிர சட்டப்பேரவையில் வைக்கப்படும் ஏடுகள், விதிகள் ஏதாவது இருந்தால் வைக்கலாம் என்று அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 2025-2026 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கு சட்டப்பேரவையில் ஒப்புதல் கோரப்படும். பேரவையை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே. சாய் ஜெ சரவணன் குமாா், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக், பேரவைச் செயலா் ஜெ.தயாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.