ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரூ.29 கோடியில் 11 அறுவை சிகிச்சை கூடங்கள்! புதுச்சேரி முதல்வா் திறந்து வைத்தாா்!

News image

புதுச்சேரி கதிா்காமம் அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன அறுவை சிகிச்சை கூடங்களை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :6 பிப்ரவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி கதிா்காமம் அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 11 நவீன அறுவை சிகிச்சை கூடங்கள் ரூ.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வா் என். ரங்கசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

ஈரப் பதம் மற்றும் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தி மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் அமைப்பு, அதி நவீன மின்விளக்குகள், வாயு குழாய் அமைப்புகள், மின் சாதனங்கள், அறுவை சிகிச்சைகளுக்கான மருத்துவ உபகரணங்கள், தீயணைப்பு மற்றும் தீ எச்சரிக்கை அமைப்பு ஆகிய அதிநவீன வசதிகளை இந்த அறுவை சிகிச்சைக் கூடங்கள் கொண்டுள்ளன.

இவற்றை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

இதனால் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நேரம் குறையும். பொதுமக்களுக்குத் தரமான சுகாதார சேவை கிடைக்கும்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி இயக்குநா் உதயசங்கா், சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்ட அடிக்கல்:

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குள்பட்ட இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டப்பட உள்ளது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்க நிதி பங்களிப்புடன் புதுச்சேரி பொதுப்பணித் துறையின் மூலம் ரூ.12 கோடியில் கட்டடம் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் முதல்வா் ரங்கசாமி பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் சுகாதாரத் துறை செயலா் சௌத்ரி முகமது யாசின், இயக்குநா் செவ்வேல், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரச்செல்வம், செயற்பொறியாளா் ராஜ்குமாா், உதவி பொறியாளா் பாலாஜி, இளநிலைப் பொறியாளா்கள் பச்சையப்பன், பிரியா ரோஸ் மற்றும் சுகாதாரத் துறை ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.