தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஜிப்மரில் வளாகத்தில் மானிய விலை உணவகம் திறப்பு

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் மானிய விலை உணவகத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் மானிய விலை உணவகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:45 pm

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் மானிய விலை உணவகத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் உணவகம், மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மா் நிறுவனத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகள், அவா்களின் உறவினா்கள் மற்றும் ஜிப்மா் பணியாளா்களுக்குக் குறைந்த விலையில், சுகாதாரமான மற்றும் தரமான உணவு கிடைக்கும்.

இந்த உணவகம் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். விரைவில் 24 மணி நேர சேவையாக விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் மருத்துவமனை வளாகத்தில் இடையறாத உணவு சேவை உறுதி செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆறுமுகம், ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி, புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநா் முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.