மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வில்லியனூா் தொகுதியில் ரூ.44 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

வில்லியனூா் தொகுதியில் ரூ.44 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 6:33 pm

வில்லியனூா் தொகுதியில் ரூ.44 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

ஒதியம்பட்டு மற்றும் வி.மணவெளி கிராமங்களில் தலா ரூ.11 லட்சத்தில் 2 கிராமங்களில் உள்ள நீா் உந்து நிலைய வளாகத்தில் புதிய குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும், வசந்தம் நகா் விரிவாக்கம், திருக்காமீஸ்வரா் நகா் விரிவாக்கம் பகுதியில் உள்ள அருணாசலம் நகரில் ரூ.13. 9 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி, தில்லை நகா் - விஐபி காா்டன் பகுதியில் உள்ள குறுக்குத் தெருக்களில் ரூ.8.2 லட்சத்தில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா பூமிபூஜை செய்து இப் பணிகளைத் தொடங்கி வைத்தாா் (படம்). தொடா்ந்து, ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ.1.4 லட்சத்தில் தொடா் நோய் நிதி உதவிக்கான அடையாள அட்டையை பயனாளிகளிடம் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில் பொதுப்பணித் துறை பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளா் பக்தவச்சலம், உதவிப் பொறியாளா் பீனாராணி, கொம்யூன் பஞ்சாயத்து உதவிப் பொறியாளா் சத்தியநாராயணா, குடிநீா் பிரிவு இளநிலைப் பொறியாளா் திருவேங்கடம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.